லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பொங்கல் விழா
ஜனவரி 29, 2012 அன்று அட்லாண்டாவில் உள்ள சுவானி நூலகத்தில் லில்பர்ன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் மற்றும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. சிறுவர், சிறுமியர்களின் நடனம், கிராமியப் பாடல்கள், ஓவியப் போட்டி, கோலப் போட்டி, 'சர்க்கரைப் பொங்கல்' சமைக்கும் போட்டி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஒப்பித்தல் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் நடைபெற்றன. 'நவீன தொலைத்தொடர்பு சாதனங்களினால் மாணவர்களுக்கு நன்மையா, தீமையா' என்ற தலைப்பில் மாணவர்கள் பங்குபெற்ற பட்டிமன்றம் சிந்திக்க வைத்தது.

மாணவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனம் ஆடி அரங்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். பொங்கல் விழாவின் சிறப்புகளைக் கணினி மூலம் வண்ணப்படங்கள் மற்றும் இசையுடன் விளக்கினர். பள்ளி முதல்வர் முனைவர். இரவி பழனியப்பநன்றி தெரிவித்தார். அப்துல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

உமா பாபா,
லில்பர்ன்

© TamilOnline.com