சத்குருவுடன் ஈஷா யோகா
"தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆன்மீகப் புரட்சி ஏற்பட்டு அதன்மூலம் அன்பு, அமைதி, ஆனந்தம் உணரப்பட வேண்டும். தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் இந்த ஆனந்தம் மலர வேண்டும்" என்பது சத்குரு அவர்களின் விருப்பமாகும். மனித வாழ்க்கை முழுவீச்சில் நடைபெற வேண்டும் என்றால் பொருளாதார முன்னேற்றம் மட்டும் போதாது. அதைத் தக்க வைத்துக்கொள்ள உற்சாகம், மன உறுதி போன்றவையும் வேண்டும். அனைத்திற்கும் மேலாகச் சிறந்த ஆன்மீக பலமும் தேவை. தமிழகத்தில் ஒவ்வொருவருமே சிறிதளவு ஆன்மீகத்தையாவது சுவைத்திட வேண்டும் என்னும் முயற்சியில் சத்குரு அவர்களே, தமிழகத்தின் பல நகரங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஈஷா யோக வகுப்புக்களைத் தமிழில் எடுத்து வருகிறார். இந்த ஈஷா யோகா வகுப்பில் தொன்மை வாய்ந்த "ஷாம்பவி மகாமுத்ரா" பயிற்சி கற்றுத் தரப்படவுள்ளது. சத்குரு அவர்களே நேரடியாக வகுப்பினை நடத்துவதோடு, தியான தீட்சையும் வழங்கவிருப்பது தனிச் சிறப்பாகும்.

ஏற்கனவே இந்த வகுப்பு மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் சத்குரு அவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மதுரை மற்றும் திருச்சி நகரங்களில் தலா 10000க்கு மேற்பட்டோரும், சென்னை நகரில் 14,000க்கு மேற்பட்டோரும், கலந்து கொண்டனர்.

ஷாம்பவி மகா முத்ரா பயிற்சி வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்ததாகும். நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டுவலி, தலைவலி, சைனஸ், முதுகு வலி, இருதயக் கோளாறு, உடற்பருமன் மற்றும் தீராத நோய்களும் குணமடையவும், வராமல் தடுக்கவும் முடியும். நினைவாற்றல், மனம் குவிப்புத் திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை சிலவாரப் பயிற்சியிலேயே 100 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களில் எவ்வித மாற்றமும் தேவையில்லை. எந்த மதமானாலும், எந்த இனமானாலும், எந்த பிரிவானாலும் இந்த யோகப் பயிற்சிக்குத் தடை இல்லை. இப்பயிற்சி அனைவரும் முற்றிலும் பரிசோதித்து அனுபவபூர்வமாக அறியக் கூடிய விஞ்ஞானமாகும்.

நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர் கவனிக்க வேண்டியவை:
* முன்பதிவு அவசியம்
* 15 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் அனைவரும் பங்கேற்கலாம்.
* 2012 மே 11, 12, 13 தேதிகளில் சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்பு நடைபெற உள்ளது.

தமிழ் வகுப்பு விவரம்:
நாள்: 2012 மே 11, 12, 13.
இடம்: Scarborough Convention Center, 20, Torham Place (Neilson & Finch), Toronto, ON M1X 0B3
தொடர்புக்கு: 416.300.3010/647.857-ISHA(4742)
வலைமனை: www.ishafoundation.org

English Program:
Date: 2012 May 4, 5, 6
Location: George R. Brown Convention Center (GRBCC), 1001 Avenida de las Americas, Houston, Texas 77010
Contact: 832-408-0663

வலைமனை: www.innerengineering.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com