அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
2007 மார்ச் 17,18 தேதிகளில் சான் ஹோசேயில் மைதிலி குமார் அவர்களின் அபிநயா நாட்டியக் குழுவினர் நாட்டிய நாடக விழாவை நடத்தினர். வருடம் தோறும் ஒரு கருத்தை மையமாக வைத்து நடத்தும் இந்த விழா இந்த ஆண்டில் பெண்கள் முன்னேற்றம் பற்றியதாக இருந்தது.

முதல் நாள் விழா கண்ணகியின் அனல், பாஞ்சாலியின் சபதம் போன்ற காவியப் பெண்களின் துணையோடு பெண்களைத் தட்டியெழுப்புவதாக அமைந்திருந்தது. ஜான்ஸி ராணி, இந்திரா காந்தி, சரோஜினி நாயுடு போன்ற உதாரணங்களும் உற்சாகமூட்டின.

ஒற்றுமையை வலியுறுத்திய இரண்டாவது நாள் நாட்டிய நாடகங்கள் வேடனும் புறாவும், பண்டோராஸ் பெட்டி, அலிபாபாவும் 40 திருடர்களும், அனுமார் கதை, தில்லானா போன்றவற்றால் அமைந்து மிகச் சிறப்பாக இருந்தன. மைதிலி குமாரும் அவரது மாணவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

உஷா பத்மநாபன்

© TamilOnline.com