அட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை
இறைவன் இயேசு கிறிஸ்துவின் பாடு மரணங்களின் மூலம் தான் மனுகுலத்துக்குப் பாவ விமோசனம் என்ற வெளிப்பாட்டின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் லெந்து நாட்கள் சாம்பல் புதன் அன்று தொடங்கி ஈஸ்டர் வரைக்கும் 47 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன் நிறைவாக அட்லாண்டா தமிழ் சபையில் சிறப்பான வழிபாடுகள் ஆயத்தப்படுத்தப் பட்டுள்ளன.

குருத்தோலை ஞாயிறு ஏப்ரல் 1ம் தேதி அன்று காலை 10 மணிக்கு குருத்தோலையுடன் சபையினர் பவனி வருவார்கள். அதைத் தொடர்ந்து பெரிய வியாழன் மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் ஏப்ரல் 5ம் தேதி வியாழன் இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகும். முதலாவது திருவிருந்து ஆராதனையும் பின்னர் இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு பொன் மொழிக‌ளையும் தியானிப்பார்கள். இந்த தியானத்தில் ஏழு சிறப்புப் பேச்சாளர்கள் பேசுவார்கள். இந்தியாவிலிருந்து வருகை தரும் மறைத்திரு நடராஜன் ஞானராஜா இவர்களில் ஒருவர்.

ஏப்ரல் 7ம் தேதி சிறு பிள்ளைகளூக்கு ஈஸ்டர் முட்டை தேடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மதியம் 3 மணிக்கு டுலுத்தில் உள்ள அரசு பூங்காவில் நடைபெறும். ஏப்ரல் 8 அன்று ஈஸ்டர் திருவிழா. இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்த நாள். காலை 10 மணிக்கு சிறப்புப் பேச்சாளர் மறைதிரு போதகர் நடராசன் ஞானராஜா சிறப்புச் செய்தி வழங்குவார்.

மேலும் விவரங்களை அறிய
தொலைபேசி: 770.723.1711 / 404.245.7674
மின்னஞ்சல்: pastor@atlantatamilchurch.org

போத. பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா

© TamilOnline.com