"ஆக்ஷன் கிங்" அர்ஜுனின் 150வது படம் பிரசாத். தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நாயகியாக மாதுரி பட்டாச்சார்யா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு முன்னணி நடிக, நடிகைகள் நடிக்கின்றனர். மெக்கானிக்கான அர்ஜுன் ஒரு ஆண் குழந்தை பிறந்தால், வளர்ந்து ஆளாகி தனது கஷ்டத்தை எல்லாம் போக்கிவிடுவான் என்று கனவு காண்கிறார். அவரது ஆசைப்படியே மகன் பிறக்கிறான். ஆனால் அவனுக்குக் காதும் கேட்காது. வாயும் பேசாது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. சங்கல்ப் என்ற காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவன் நடித்திருப்பது படத்தின் ஹை-லைட். ஆக்ஷன் கிங்கின் இப்படத்தில் சண்டைக் காட்சி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையமைக்க, மனோஜ் சதி கதை, வசனம், எழுதி இயக்குகிறார். சமீபத்தில் நடந்த உலகப் பட விழாவில் பாராட்டுதல்களைப் பெற்ற படம் இது.
அரவிந்த் |