தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/4 கிண்ணம் புழுங்கலரிசி - 1 கிண்ணம் உப்பு - சிறிதளவு
செய்முறை: அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து அவலையும் ஊற விட்டு எல்லாவற்றையும் வழக்கமாக தோசைக்கு அரைப்பது போல் நன்றாக அரைத்து உப்புப் போட்டு வைக்கவும். மறுநாள் எடுத்து தோசை வார்க்கலாம். மிருதுவாக இருக்கும். இட்லிக்கும் மூணுக்கு ஒரு பருப்பு, 1/2 கிண்ணம் அவல் போட்டு அரைத்து இட்லி செய்யலாம். பூப்போல இருக்கும்.
தங்கம் ராமசாமி |