பேபி கார்ன் பக்கோடா
தேவையான பொருட்கள் பேபிகார்ன் - 10 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 4 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி கடலை மாவு - 2 கிண்ணம் அரிசி மாவு - 1/2 கிண்ணம் கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு கொத்துமல்லி (நறுக்கியது) - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க
செய்முறை பேபிகார்ன், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசி மாவுடன் நெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வெங்காயம், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், இந்தக் கலவையைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். தேவையானால் மிளகாய்த்தூள் கலந்து கொள்ளலாம். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து தக்காளி சாஸுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |