அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
சென்னையில் நடைபெற்ற புதிர்வாசிகள் சந்திப்பில், நேரிலும், இணையவழியும் சந்திந்த்தவர்க்கும், சில தொழில்நுட்பக் கோளாறுகளால் தயாராக இருந்தும் சந்திக்க முடியாதவர்க்கும் நன்றி. மூன்றாண்டுகள் மாதந்தோறும் புதிர் அளித்துவந்த (அபாகு) பார்த்தசாரதி இம்முறையளித்த பெரிய புதிரை முயலுங்கள். மேலும் பலரும் புதிராக்க முயன்று புதிருலகை விரிக்கும்படி அழைக்கிறேன் அதற்கு இனி சந்திப்புகள் நடைபெறும். (அப்படியே விடையையும் கண்டு பிடித்து எழுதுங்கள்!)
*****
குறுக்காக
3. மரத்தாலான ஓர் இருப்பிடம் (3)
5. பெரிதாகி வந்து கள்ளர் குடியை அழித்து நுழைந்தனர் (5)
6. அடை இல்லை நேரெதிர் (2)
7. நீதிக்கு முன்னேயிருப்பவரைத் தொடர்ந்தவர் வராமல் ஒழித்துவிடு (3)
8. அருள்மிகு தியானகுருவிடம் தேவைக்கதிகமாக இருப்பது (5)
11. தூங்காதே தோழி பாதி விருத்தி கலையும் (5)
12. கரையான் அரிக்காததைத் தடு (3)
14. உரக்கச் சொல்லிக் கூந்தலையும் விடுதலையும் பெறலாம் (2)
16. இவன் தொழிலால் இடையனுக்குக் காக்கும்படி நேரிட்டது (5)
17. தலை போகும்படி விவாதம் செய்து ஏச்சுதான் கிடைக்கும் (3)
நெடுக்காக
1. கூரைச் சேவலுக்கு ஜோடியா? கொஞ்சம் கீழிருந்து ஒலியெழுப்பும் (6)
2. முடிவான விடை (3)
3. பொழுதுக்கு மாறும் அரசியல் கட்சிகளின் அமைப்பு (5)
4. ஐங்கரனின் ஐந்தாம் கரத்தில் கரமில்லை என்று போற்று (2)
9. களிறுக்கந்தநாள் இளவயதானது (6)
10. பள்ளத்தில் மூன்றாம் கடுகம் குறைய விலையைக் கண்டுபிடி (5)
13. கார்த்திகைப் பொரி வடிவமாய் மூடு (3)
15. எதிரான பதிவில் வாயிலிருப்பதைப் பிடுங்க வரைமுறை (2)
வாஞ்சிநாதன்
மார்ச் 2012 விடைகள்குறுக்காக: 5. பாவை 6. கமண்டலம் 7. மெதுவடை 8. நாழிகை 9. யயாதி 11. காமன் 13. ருக்மணி 16. சூரியகாந்தி 17. தளை
நெடுக்காக: 1. துவைத்து 2. சுகமடைய 3. கெண்டை 4. செலவழி 10. திருத்திய 12. மயிரிழை 14. மந்தம் 15. போகாது
மார்ச் 2012 புதிர் மன்னர்/அரசி
சதீஷ்பாலமுருகன், ஃப்ரீமான்ட், கலி.
பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா.
பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை
மற்றவர்கள்
ந.ஸ்ரீ. சுந்தர், கூபர்டினோ, கலி.; லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர்சிடி, கலி.; அ.வெ. லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.; விஜி ஸ்ரீனிவாசன், சன்னிவேல்; எஸ். ஹரிஹரன், மும்பை; முத்து சுப்ரமணியம், ஜார்ஜியா; ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்ஸி; ராஜி வெங்கடசுப்ரமணியம், அசோக் நகர், சென்னை; நாகராஜன் அப்பிச்சி கவுண்டர் நியூயார்க் (ஜனவரி).