மைக் செட் பாண்டி


'பூமகள் ஊர்வலம்', 'பாண்டி', 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்', 'முத்துக்கு முத்தாக' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராசு.மதுரவன் அடுத்து இயக்கும் புதிய படம் 'மைக் செட் பாண்டி'. இப்படத்தில் சபரிஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக சுனேனா நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், சூரி, ராஜ்கபூர், வையாபுரி, யோகி தேவராஜ், சிசர் மனோகர், கருணாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். கவி பெரியதம்பி இசையமைக்கிறார். காதலும், நகைச்சுவையும் கலந்து உருவாகி வரும் இப்படத்தை இயக்குவதுடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியிருக்கிறார் ராசு.மதுரவன்.

அரவிந்த்

© TamilOnline.com