Comcast வழங்கும் குறைந்த விலை இணையமும் கணினியும்
குறைந்த வருமானமுள்ளவர்களின் இல்லங்களிலும் இணையத் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் காம்காஸ்ட் நிறுவனம் 'Internet Essentials' என்ற அகல அலைப்பட்டைத் (Broadband) திட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. இதன்கீழ், பள்ளி மாவட்டங்களில் தேசீய பள்ளி உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவுக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கு மாதம் $9.95 கட்டணத்துக்கு இணையத் தொடர்பும், $150 விலையில் இணையத் தயார்நிலைக் கணினியும் கொடுப்பதோடு, அவர்களுக்கு இணையத்தைப் பயன்படுத்தக் கற்பித்தும் தருகிறது. இதுவரை 41,000 குடும்பங்களுக்கு இணையத் தொடர்பும், 5,500 குடும்பங்களு கணினிகளும் இத்திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக, NSLP திட்டத்தின்கீழ், குறைந்த விலையில் உணவுபெறத் தகுதியுள்ள சிறாரின் குடும்பங்களுக்கும் இணையத் தொடர்பு மற்றும் கணினியைக் குறைந்த விலையில் தர இந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. கல்வியாண்டின் இரண்டாவது காலாண்டு முதல் இது அமலுக்கு வரும். அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் கீழ் முன்னரே பிராட்பேண்ட் தொடர்பு பெற்றுள்ளவர்களின் இணைப்பு வேகத்தை இரட்டிப்பாக்கவும் தீர்மானித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: internetessentials.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com