குறுக்காக
5. பெண் கண்ணின் திறன் மெய்யைப் பொசுக்கியது (2)
6. தண்ணீர் எடுத்துச் செல்ல கங்கை தொடங்குமிடம் நாற்பத்தெட்டு நாட்கள் வை (6)
7. மசாலா இல்லாத வகை பாயசத்தோடு சேரும் (4)
8. ஒரு மணி, நிமிடமாகச் சென்றால் ஒரு நாள் என்ன ஆகும்? (3)
9. புரு அண்ணன்களைவிட முதுமை அடையக் காரணமானவன் (3)
11. வேற்றுருவில் மகான் ரதியோடு சேர்ந்தான் (3)
13. வெண்ணய் திருடியோனே வேண்டாம் சிசுபாலன் என்னைக் கவர்ந்திடுவாய் ஏற்று (4)
16. ஒரு பூ மாலையில் மேற்கை நோக்கும் (6)
17. ஈயத்தைப் பார்த்து இளிப்பதில் பாதி கட்டு (2)
நெடுக்காக
1. சொத்து வைத்துள்ளவரிடையே துணியை இப்படி உடுத்திக் கொள்வதுதான் சரி (4)
2. குணமாவதற்கு சுகர், மடையன் இருவரும் காலை வெட்டிக் கொண்டார்கள் (5)
3. தூண்டிலில் சிக்கிடும் கால் பகுதி? (3)
4. மெய்யில்லாமல் செல்ல ஒரு பாதை கையிருப்பைக் குறைக்கச் சொல் (4)
10. பிழைகளை நீக்கிய செல்வம் அகத்தியம் வீட்டைத் துறந்ததால் பெற்றது (5)
12. அபாயகரமான குறைவான இடைவெளி உன்னையல்லால் உயிரின் மழைக்குள் ஒதுங்கியது (4)
14. வியாபாரத்தில் நஷ்டம் தரும் நிலை பசியைப் போக்கிடும்! (4)
15. காதலன் முன்வந்தபோது செல்வதில்லை (3)
வாஞ்சிநாதன்
பிப்ரவரி 2012 விடைகள்குறுக்காக: 3. பூகம்பம் 6. ருமேனியா 7. வரப்பு 8. கட்டியவன் 13. தரக்குறைவு 14. பட்டாணி 15. மிதக்க 16. வளைந்தது
நெடுக்காக: 1. உருவகம் 2. பனி மூடிய 4. கள்வன் 5. பழுப்பு 9. வளர 10. சகுந்தலை 11. சவுக்கடி 12. கட்டளை 13. தணியாத
பிப்ரவரி 2012 புதிர் மன்னர்கள்:
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
கே.ஆர். சந்தானம், வேளச்சேரி, சென்னை.
அ.வே. லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.
மற்றவர்கள்
லாவண்யா ராமநாதன், ஃபோஸ்டர் சிடி, கலி.; எஸ் நாராயணன், ஃபால்சம், கலி.; வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை; பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா; யோசிப்பவர், தமிழ்நாடு; ஸ்ரீனிவாசராமானுஜம், ஹானோவர் பார்க், இல்.; ஷீலா கோபாலசாமி, அமிர்தபுரி, கேரளா; முத்துசுப்ரமணியம், அட்லாண்டா மெட்ரோ; சுரேஷ் கிருஷ்ணா, சான் ஹோசே, கலி.; வே. சந்திரசேகரன், கூபர்டினோ, கலி.; சிங்காநல்லூர் கணேசன், பாலோ அல்டோ, கலி.; சதீஷ் பாலமுருகன், ஃப்ரீமாண்ட், கலி.; மும்பை எஸ் ஹரிஹரன்.
ஜனவரி மாதம் விடுபட்ட பெயர்கள்:
எஸ். ஹரிஹரன், மும்பை; இந்திரா தங்கசாமி, ரம்யா இந்திரஜித்; நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர், நியூ யார்க்.