தேவையான சாமான்கள்: புளி - எலுமிச்சை அளவு மிளகாய் வற்றல் - 4 பெருங்காயம் -1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி பூண்டு - 1 முழுதாக (10-12 பல்) கறிவேப்பிலை- ஒரு பெரிய கொத்து உப்பு-தேவைக்கேற்ப எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
வறுத்து அரைக்க: கொத்துமல்லி விதை - 4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி மிளகு - 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 4 பெருங்காயம் -1/2 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை: புளியை இரண்டு கிண்ணம் வெந்நீரில் ஊறவைத்துச் சாறெடுத்துக் கொள்ளவும். மேலே வறுத்தரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பிறகு பூண்டு, கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிச் சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் கரண்டியளவு எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம், மிளகாய் வத்தல் தாளித்து, மஞ்சள் பொடி சேர்த்து, பிழிந்து வைத்துள்ள புளிக் கரைசலைச் சேர்த்து, உப்புப் போட்டு கொதிக்கவிடவும். பின் அரைத்த விழுது மற்றும் பொடித்த சாமான்களைச் சேர்த்து சிறிது கெட்டியாகும்வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கவும். விரும்பினால் அடுப்பை அணைக்குமுன் சிறிய கட்டி வெல்லத்தைச் சேர்க்கலாம். இத்துடன் பாசிப்பருப்பு துவையல் சேர்த்துச் சாப்பிட சூப்பராக இருக்கும்.
விஜயா, அட்லாண்டா |