ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி: கிறிஸ்துமஸ்
டிசம்பர் 18, 2012 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் (ஜார்ஜியா) கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் வண்ணமயமான உடை அணிந்து வந்திருந்தனர். சான்டாவை நினைவுறுத்தும் சிகப்பு மற்றும் வெள்ளை உடைகளும், கிறிஸ்துமஸ் குல்லாவும் அணிந்து வந்திருந்தது கொள்ளை அழகு. பள்ளியில் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டு, வகுப்பு வாரியாகப் பரிசுகள் குவிக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பள்ளி விழாக்குழு மற்றும் நிர்வாகக் குழுவினர் குழந்தைக்களுக்குப் பரிசுகளைத் தந்தனர்.

இராஜா வேணுகோபால்,
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி.

© TamilOnline.com