ஈஷா வித்யா: இசை மழை
ஜனவரி 14, 2012 அன்று மாசசூசெட்ஸ், ஆஷ்லாந்து உயர்நிலைப் பள்ளியில், 'நினைத்தாலே இனிக்கும்' மெல்லிசைக் குழுவினரின் 'இசை மழை 2012' நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஷா வித்யா என்ற மனிதநேய அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 'மஹாநதி' படத்தின் 'தைப் பொங்கலும் பொங்குதே' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. இளயராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் பலவற்றைப் பாடிய பின் 'கொலவெரி', 'என்னை என்ன செய்தாய்' போன்ற புதிய பாடல்களும் அரங்கத்தைக் கலக்கின. 'யம்மாடி ஆத்தாடி', 'ஒத்த சொல்லாலே' போன்ற குத்துப் பாடல்கள் ரசிகர்களை ஆட வைத்தன. நிகழ்ச்சியை சங்கர் தொகுத்தளித்தார். ராஜ் வேல்முருகன் நன்றியுரை ஆற்றினார்.

ஈஷா வித்யா 2005ஆம் ஆண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 3500 குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் தரமான கல்வி பயில்கிறார்கள். கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி மறுமலர்ச்சிக்கு உழைக்கிறது ஈஷா வித்யா.

வலையகம்: www.ishavidhya.org
வலைப்பக்கம்: sites.google.com

தேவி சுந்தரேசன்,
ஷ்ரூஸ்பெரி, மசாசூசெட்ஸ்

© TamilOnline.com