ஜனவரி 15, 2012 அன்று மிச்சிகனின் பாண்டியக் நகரில் உள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சேதுராமன் முன்னுரை மொழிந்தார். எப்படி தேவாரம் போன்ற உயரிய நூல் காந்தி அடிகள், ஜி.யு.போப் முதலியோரைக் கவர்ந்தது என்பதை விளக்கினார்கள். ஆலய ஸ்தாபகரும், கொடை வள்ளலும், ஆன்மீக வழிகாட்டியுமான கிருஷ்ண குமார் நிறைவுரை ஆற்றினார்.
மதுரை நா. சேதுராமன் |