கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா இந்த வருடம் மே 20 அன்று Foothill College, Los Altos கலையரங்கில் நடக்க உள்ளது. விழாவில் கூப்பர்டினோ, பிரீமாண்ட், எவர்கிரீன், பிளசண்டன் கிளைகளின் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்குப் பெறுகிறார்கள். குழந்தைகள் காலை முதல் மாலை வரை தங்கள் திறமைகளை இயல், இசை, நாடகமாக வெளிக்காட்டுகின்றார்கள்.

இந்த ஆண்டில் நிகழ்ச்சிகள் யாவும் தமிழகம், இந்தியா, உலகம் என முப்பெறும் பின்னணிகளில் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிளைகளில் இருந்து விழா ஒருங்கினைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் விறுவிறுப்புடனும், பரபரப்புடனும் பல்சுவை நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டு, தொகுத்து வழங்குகிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் தமிழ்மொழி, நாட்டுப்பற்று, இந்திய விடுதலை, இந்திய ஒற்றுமை, இயற்கை, அன்பு போன்ற கருத்துக்களில் காண்போர் நெஞ்சை அள்ளும் வகையில் அரங்கேற்றுகிறார்கள். பின் விழாவில் நான்கு

எங்கள் மாணவர்கள் ஆயகலைகளை கண்டு மகிழ, திரளாக வருகை தந்து, களைப்பை மீறி பெருமிதத்துடன் நிகழ்ச்சி களில் இறுதி வரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு www.catamilacademy.org

© TamilOnline.com