கனடாவில் சத்குருவின் நிகழ்ச்சிகள்
ஈஷா அமைப்பை நிறுவி வழி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் மிகுந்த ஆத்மபலம் கொண்ட ஒரு யோகி. ஆழ்ந்த மனிதாபிமானம் கொண்டவர். அவரது முன்னிலையில் மனிதனுக்கு வரம்புடைந்த இயற்கையான ஆனந்த நிலை ஏற்படும் வியக்கத்தக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியா டுடே இதழ், இந்தியாவின் 50 மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக சத்குருவைத் தேர்ந்தெடுத்துள்ளது. மனித பிரக்ஞையை உயர்த்துவது அவரது நோக்கம். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைத் தொட்டிருக்கிறார் சத்குரு.

ஈஷா கிரியா என்பது சத்குரு வடிவமைத்துள்ள எளிய மற்றும் சக்திவாய்ந்த தியானமுறை. இதை இலவசமாக உங்கள் அருகில் இருக்கும் இடத்திலேயே கற்க, (832)-408-0663 என்ற எண்ணில் அழைத்து அல்லது www.IshaKriya.com ஆன்லைனில் அணுகலாம். மேலும், சத்குரு மே 4-6, 2012 தேதிகளில் ஹூஸ்டன், டெக்சஸில் 3 நாள் Inner Engineering யோகப் பயிற்சி நடத்த இருக்கிறார். அவர் கானடாவின் டொரண்டோ மற்றும் ஒன்ட்டாரியோவில் மே 11 -13 தேதிகளில் தமிழில் 'ஈஷா யோகா' கற்றுக்கொடுக்க இருக்கிறார். மேலும் அறிய, அல்லது சத்குருவின் வீடியோக்கள் பார்க்க, www.BeBreatheBlossom.com இணையதளம் செல்லவும்.

ஜயந்தி ஹரி,
டொரண்டோ

© TamilOnline.com