லா ஹோண்டா மலையில் இருக்கும் மஹா காலேஸ்வரர் திருக்கோவில் சான்ட கிளாராவுக்கு இடம்பெயர்கிறது. 6 அடி உயரமும் 3500 பவுண்டு எடையும் கொண்ட இந்தக் கருங்கல் லிங்கம் 1116 சிவலிங்கங்களைத் தன்னில் கொண்ட சஹஸ்ர ஜோதிர்லிங்கம் ஆகும். லா ஹோண்டாவில் ஆகஸ்டு 2010ல் சுவாமி சதாசிவம் சிவாசாரியார் (சென்னை காளிகாம்பாள் கோவிலின் தலைமை சிவாசாரியார்) இந்தக் கோவிலைத் தொடங்கி வைத்தார்.
பிப்ரவரி 19, 2012 அன்று காலை 10:30 மணிமுதல் அடுத்த நாள் மதியம் 3:00 மணிவரை சிவராத்திரியை ஒட்டி நடக்க இருக்கும் வைபவத்தில் இந்த மஹா காலேஸ்வர ஜோதிர்லிங்கம் சான்ட கிளாராவில் உள்ள புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த வளாகம் (2344-A Walsh Avenue, Building F, Santa Clara; in the Santa Clara Commerce Park, just off San Tomas Expressway) பெரியது என்பதால் இதிலேயே ஸ்ரீ சாம்ப சதாசிவ வித்யா பீடமும் செயல்படும்.
இணையதளம்: srimahakalmandir.org மின்னஞ்சல்: info@srimahakalmandir.org
வெவ்வேறு வகைகளில் பங்கேற்க: Dr. Anjali Gulati - 408-464-8874; Pandita Amba Sathyojatha - 650-228-8489; Vandana Nathan - 408-627-9331; Shoba Gopalan - 408-717-0808; Sreeram Pydah - 781-983-1911; Atri Macherla - 417-350-5853.
செய்திக் குறிப்பிலிருந்து |