மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி
பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற படங்களின் ரசிகரா நீங்கள்? இப்போது தமிழில் உருவாகி வருகிறது 'முகமூடி'. (அது சரி, Phantom அல்லவா முகமூடி என்று சித்திரக்கதை ஆனது!). ஜீவா இதில் நாயகனாக நடிக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகி. நரேன் வில்லனாக நடிக்கிறார். குங்ஃபூ கலையை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மிஷ்கின். மிஷ்கினின் கனவுப்படம் என்று கூறப்படும் இதற்கு இசை கே. யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது.



அரவிந்த்

© TamilOnline.com