பிப்ரவரி 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
3. ஆழிப் பேரலைக்கு முன் வருவது முல்லையைத் தாங்குவதோ? (5)
6. அணைந்த தீனி யாருமே குழம்பும்படியான நாடு (4)
7. தாவரப்புத்தகத்தைப் பிரிக்கும் பாத்தி (4)
8. புகுந்த வீட்டில் இருப்பவன் ஏமாற்றுக்காரனிடம் முதலில்லாமல் வட்டி கொடுத்தவன் (6)
13. வழங்குவதால் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்ந்ததல்ல (6)
14. பத்திரம் கிழிந்த துணி சுண்டல் கடலை போன்றது (4)
15. நீர்மேல் நின்றாட மிக்க தளர்ச்சியுடன் தலையிட்டான் (4)
16. துவாரம் இட்டு வந்த குழப்பத்தில் நேர்மையிலாதது (5)

நெடுக்காக
1. உறையிலிருந்து எடுக்க முனையுடைந்த கம்பி அணி (5)
2. தனி மூலை தலை சீவிப் படிய வாரினால் மார்கழிப் புல்லை விவரிக்கலாம் (2, 3)
4. காவலர்கள் வன்முறையால் சிறைப்பட்ட திருடன் (4)
5. கனி உப்பு துளி குறைந்ததால் பெற்ற நிறம் (4)
9. உயர்ந்தோங்க பவளக்கரம் தாள் கிழித்தது (3)
10. பாரதத்தாய் (5)
11. சாட்டைத் தாக்குதலுக்குள்ளாகும் விறகுமரத்தின் வேர்ப்பாகம் ? (5)
12. ஆணை வேலை செய்யச் சொல்லும் சொல் (4)
13. அடங்காத காதணியா? தங்கத்திலிருக்கின்றது. (4)

வாஞ்சிநாதன்

ஜனவரி 2012 விடைகள்

© TamilOnline.com