சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் விஜயம்
2011 அக்டோபர் 24 முதல் நவம்பர் 27 வரை கௌடிய வைணவ சங்கத்தின் (GVA) நிறுவன ஆச்சாரியரான சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் அவர்கள் நியூ ஜெர்ஸி, வாஷிங்டன் டி.சி., டெக்சாஸ், ஜார்ஜியா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ஸ்ரீமத் பகவத் கீதையிலிருந்தும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு மதத்தினரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். நவம்பர் 28 அன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்கள்.

லாப நோக்கற்ற அமைப்பான கௌடிய வைணவ சங்கத்தின் (GVA) நிறுவன ஆச்சாரியர் சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளதோடு, வேத நூல்களின் போதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்பொழிவுகளாக வழங்குகிறார்கள். கௌடிய சங்கம் நியூஜெர்ஸி, டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியாவில் வாராந்திர ஸ்ரீமத் பாகவத வகுப்புகள் நடத்தி வருகின்றது.

விவரங்களுக்கு இணையதள முகவரி: www.gva.in
தொலைபேசி: 1-888-9GVA-USA.

பத்ரி நாராயண தாசாதிகாரி

© TamilOnline.com