நாயகனாக ஜெயபாரதியின் மகன்
காதல் கிசுகிசு' படத்தில் நடித்த பாலா அடுத்து 'கல்லூரி காதல்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் பார்த்திபனிடம் உதவியாளராகப் பணி யாற்றிய மனோரஞ்சன் முதன்முதலாக இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது 'கல்லூரி காதல்'. புதுமுகம் ஒருவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். அதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

அன்றைய பிரபல மலையாள நடிகை ஜெயபாரதியின் மகன் முன்னா இப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் என்பது இப்படத்தைப் பற்றிய சிறப்புச் செய்தி.

கேடிஸ்ரீ

© TamilOnline.com