அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
கிறிஸ்து பிறந்த நன்னாளை ஒட்டி அட்லாண்டா தமிழ் சபை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறி முடிந்தன. ஆரம்ப கட்ட நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடி தேவ செய்திகளை அறிவித்தனர். குறிப்பாக இவ்வாண்டு குளோபல் மால் என்ற இந்திய கடைகள் நிறைந்த இடத்தில் கிறிஸ்துமஸ் பாடல்களை வாராவாரம் பாடினர்.

அடுத்த கட்டமாக வாலிபர் சிறுவர் கிறிஸ்து பிறந்த்த நாள் நிகழ்ச்சி டிசம்பர் 18ம் தேதி அன்று நடைபெற்றது. அவர்கள் கிறிஸ்து பிறப்புப் பாடல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடினர். இயேசு நமக்காகப் பரலோகத்தில் இறைவனிடம் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஒரு சிறப்புக் குறுநாடகம் நடைபெற்றது. பின் சிறுவர்கள் அழகான‌ கிராமிய நடனம் வழங்கினர். "பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பொறுப்பு" என்ன‌ என்று போதகர் பால்மர் பரமதாஸ் செய்தி பகர்ந்து கொள்ள. கிறிஸ்துமஸ் தாத்தா சிறு பிள்ளைகளுக்கு வெகுமதிகளை அளித்தார்.

டிசம்பர் 25 அன்று ஏற்ற நேரத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை தொடங்கியது. குழுவினர் பாடல்களைப் பாடினர். 'இயேசு கிறிஸ்து பூலோகத்திற்கு வந்த நோக்கம்' என்னவென்று போதகர் பால்மர் பரமதாஸ் சிறப்புரை ஆற்றினார். தொடந்து சபை நிர்வாகக் குழு தலைவர் சகோ. ஆன்டனி அற்புதராஜ் வருடாந்திர அறிக்கை வாசிக்க, ஓய்வு நாள் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் விருந்துடன் விழா இனிதே நிறைவ‌டைந்த‌து.

போத. பால்மர் பரமதாஸ்,
அட்லாண்டா

© TamilOnline.com