ஜனவரி 12, 2012, சனிக்கிழமை அன்று ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி, லக்ஷ்யா பாலகிருஷ்ணனின் 'யஜாமஹே' என்ற நடன நிகழ்ச்சியை, பாலோ ஆல்டோவிலுள்ள கபர்லி அரங்கத்தில் வழங்குகிறது. குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யையான லக்ஷ்யா ஏழாண்டுகளாக அவரிடம் நடனம் பயின்று வருகிறார். 2010ம் ஆண்டில் இவரது பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி 'ஜீனா' சேவை அமைப்புக்கு நிதி திரட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரபணு அல்லது நரம்பியல் ரீதியான காரணங்களால் மனம்/உடல் ஆகியவற்றின் வளர்ச்சிக் குறைபாடு நோய்களான ஆடிஸம், செரிப்ரல் பால்ஸி போன்றவற்றால் துன்புறும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயல்கிறது ஜீனா. ஏப்ரல் 2010ல் தொடங்கப்பட்ட இந்தத் தன்னார்வ அமைப்பு விரிகுடாப் பகுதி தென்கிழக்கு ஆசியச் சமூகங்களுக்குத் தொண்டு புரிந்து வருகிறது. தற்போது சிலிகான் பள்ளத்தாக்கிலும் இந்தியாவிலும் திட்டப்பணிகளை நடத்தி வருகிறது.
மேலும் விபரங்களுக்கு: தொலைபேசி: அனு - 408.718.3727 மின்னஞ்சல்: anubalki@gmail.com |