மயங்கினேன் தயங்கினேன்


சமூக அவலங்களைத் தோலுரிக்க வருகிறது மயங்கினேன் தயங்கினேன். மனநலவிடுதியில் நடக்கும் பாலியல் வன்முறையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர இருக்கும் இப்படத்தில் நிதின் சத்யா நாயகனாக நடிக்கிறார். நாயகி திஷா பாண்டே. மற்றொரு நாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்கம்: எஸ்.டி.வேந்தன்.

அரவிந்த்

© TamilOnline.com