'எரியும் தணல்' அதர்வா


'பாணா காத்தாடி' படத்தின் மூலம் பரவலாக கவனம் பெற்றவர் நடிகர் முரளியின் மகனான அதர்வா. அவர் நாயகனாக நடிக்கும் படம் 'எரியும் தணல்'. படத்தை பாலா இயக்குகிறார். இசை: ஜி.வி. பிரகாஷ்குமார். மகனை வளர்க்கக் கஷ்டப்படும் தம்பதியினரின் கதைதான் எரியும் தணல். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் பின்னணியாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான 'எரியும் பனிக்காடு' என்ற நாவல்தான் 'எரியும் தணல்' என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com