யானை இல்லாத 'பாகன்'


"உருவத்தில் பெரிய யானையைச் சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சனைகள் நிறைந்த இந்தப் பெரிய வாழ்க்கையைச் சமாளித்து வாழும் ஒருவனின் கதையே பாகன்" என்கிறார் இதன் இயக்குநர் முகமது அஸ்லம். இவர் சேரன், அமீர், ராதா மோகன் போன்றோரிடம் பணியாற்றியவர். பாகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கோவை சரளா, ஜார்ஜ், சூரி, பாண்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இசை: ஜேம்ஸ் வசந்தன்.

அரவிந்த்

© TamilOnline.com