தேவையான பொருட்கள்: பச்சைக் கொத்துமல்லி - 1 கட்டு பச்சை மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் சீரகம் தாளிக்க - 1/2 தேக்கரண்டி வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் காரப்பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப புளி - சிறிதளவு எண்ணெய்/நெய் - 1/2 தேக்கரண்டி அரிசி - 1 கிண்ணம்
செய்முறை: குக்கரில் அரிசியை உதிர் உதிராகச் சாதம் வடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், பச்சை கொத்துமல்லி கீரை, புளி, தேங்காய்த் துருவல் இவற்றைப் போட்டுச் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய், நெய் இரண்டும் 1/2 தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் சீரகம் தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளியைப் போட்டு வதக்கவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லிக் கலவையைச் சேர்த்து, தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி (காரப்பொடி), உப்பு போட்டு நன்கு வதக்கவும். (சுமார் 5 நிமிடங்கள்). இந்தக் கலவையில் சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சாதத்தில் சேர்த்துப் பரிமாறலாம். உருளை வறுவலோடு சாப்பிட வெகு சுவை.
பிரேமா நாராயணசுவாமி, ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா |