ஓம சாதம்
தேவையான பொருட்கள்:
வறுத்துப் பொடி செய்ய:
ஓமம் - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 2
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/4 கிண்ணம்
அரிசி - 1 கிண்ணம்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
அரிசியை குக்கரில் உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். ஓமம், மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இவற்றைச் சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த தும் கடுகு போட்டு, வெடித்ததும், பெருங் காயப் பவுடர், மஞ்சள் தூள் சிறிதளவு போட்டு புளிக்கரைசலை ஊற்றி தேவை யான அளவு உப்பும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். கறிவேப்பிலையை உருவி அதில் போடவும். புளி வாசனை போனதும் இந்த கிரேவியுடன் பொடித்து வைத்துள்ள பொருட்களையும் (மசாலா வையும்) சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கெட்டியாக ஆனதும் சாதத்தில் கிரேவி, சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு 1 மணி நேரம் முன்பே செய்துவிடலாம். ஊறியவு டன் மிகவும் சுவையாக இருக்கும். ஓம சாதம் அஜீரணக் கோளாறுகளுக்கு ஏற்ற மருந்தாகவும் இருக்கும். ஏதேனும் பொரியல் அல்லது அவியலுடன் சாப்பிட சூப்பர் ஜோடியாக இருக்கும்.

பிரேமா நாராயணசுவாமி,
ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com