டிசம்பரில் தென்றல், அபாகு புதிர் எல்லாம் ஏகப்பட்ட சங்கீத வாசனையுடன் வந்துவிட்டதால் இப்போது அப்படியே தடம் மாற்றிவிட்டேன். பூகோளம், சரித்திரம் என்று ஆரம்பித்துப் பின்னர் சங்க காலத்துக்கும் இலக்கணத்துக்கும் எட்டிப் பார்க்கிறது இந்த மாதப் புதிர். எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
(இசைப்புதிரில் humming போல் வார்த்தையின்றிப் பாடுவதை "ஆகாரம்" என்று கொண்டு குறிப்பை அளித்திருந்தேன். அது சரியல்ல, சரியான சொல் 'அகாரம்'தான் என்று சிலர்
எழுதியுள்ளார்கள். தமிழ்ப்படுத்தும்போது வழக்கம் 'அகரம், இகரம்' என்றுதான் வரும். அதாவது முதலிரண்டும் குறில்கள், அல்லது இரண்டும் நெடில்கள் என்று வருமென்பதால் அப்படி நான் நினைத்து விட்டேன்.
குறுக்காக
3. மும்பைப் பகுதியில் ஒரு பகுதி கர்நாடகாவில் பாய்கிறது (3)
5. நான் போன பின் நாயர் முன் கலா செய்த போராட்டத்தில் ஹுமாயூனும் அடக்கம் (5)
6. அரசு, பனை இவற்றின் ஓரங்களால் நிழல் கொண்ட நீர்நிலை (2)
7. இவளிடம் போய் பிச்சையெடுக்க வேண்டுமென 9இல் இருப்பவள் கூறினாள் (3)
8. மடிப்பு கலையாத புனித நதி சங்கமத்தில் மெய் நீக்கிய சத்தம் (5)
11. பொன் எழில் பையும் இரண்டு குறைந்து பசுமையான சோலையாகும் (5)
12. கொம்பில் படர்ந்து சமைக்கப்படுவது, சங்ககாலப் பெண்மேல் படர்ந்து வாட்டும் (3)
14. பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் முழக்கத்தில் தமிழ் இலக்கணம் காணலாம் (2)
16. சாலையில் வழி சொல்லும் ஏசி, காசை உள்ளிறைக்கும் (5)
17. ஒன்றில் சிறு பகுதி, விழுந்தால் பற்றாக்குறை (3)
நெடுக்காக
1. அம்பில் வைத்த தமிழ் முக்தி கடலினும் பெரிது (6)
2. ஏதிலார் மெய்துறந்தார் கெட்டபின் ஈந்ததுவோர் தீதிலா நீதிநூலாம் தேர் (3)
3. துஷ்யந்தனுக்கு மறதி உண்டாக்கியவர் பல் தேய்க்காதவரோ? (5)
4. பணக்காரப் புலவர்கள் வெண்பாவை இதைக் கொண்டு முடிக்கலாம் (2)
9. விருச்சிக முனிவரைப் பல ஆண்டுகள் பட்டினியாக்கியவள் (6)
10. அத்தி, கோழி, ஆடு தலைகளை வெட்டிக் குலைத்து நீக்கிவிடு (5)
13. கடியலூர்ப் புலவர் கப்பலோட்டிய தமிழனை இங்கே பார்த்தார் (3)
15. பெரிய துரைக்குத் தலை காட்டிய பெண் (2)
வாஞ்சிநாதன்
டிசம்பர் 2011 விடைகள்
குறுக்காக:5. நளினகாந்தி 6. தறி 7. பூபாளம் 9. திருடன் 10. சுயாட்சி 12. சாலகம் 13. ஆதி 14. திருமணநாள்
நெடுக்காக: 1. வளி 2. ஆகாரம் 3. நீதிமதி 4. பதட்டமாக 8. பாதயாத்திரை 11. சிந்திய 12. சாரமதி 15. நாரை
டிசம்பர் 2011 புதிர் மன்னர்/அரசிகள்
சதீஷ் பாலமுருகன், ஃப்ரீமாண்ட், கலி.
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
கி. கோபாலசாமி, அமிர்தபுரி, கேரளா
மற்றவர்கள்:
எஸ். பார்த்தசாரதி, அரும்பாக்கம், சென்னை; ந.ஸ்ரீ. சுந்தர், கூபெர்டினோ, கலி.; அ.வெ.லக்ஷ்மிநாராயணன், சான் டியேகோ, கலி.; பூங்கோதை, மெல்போர்ன், ஆஸ்திரேலியா; ஜி.கே. ஷங்கர், பெங்களூரு; திவனி, ஃப்ரீமாண்ட், கலி.; திருமூர்த்தி சுப்ரமணியம், செர்ரி ஹில், நியூ ஜெர்ஸி.