சமீபகாலமாகத் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான பா.ம.க., தி.மு.க அரசு, அதன் திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்சினைகளில் ஆளும் தி.மு.க. அரசு கூட்டணிக் கட்சிகளை கலந்து பேசவில்லை என்றும், தி.மு.க அரசு சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்ள பா.ம.க. ஒன்றும் அதன் ளைக் கழகமல்ல என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. முக்கிய திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம், துணைநகரம், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவை களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக அரசு மூடிவிட்டு மதுவிலக்கு கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசுக்கு யோசனை தெரிவித்தார் பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். முதல்வர் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறிவிட்டார்.
மத்தியில் உள்ளது போல் தமிழகத்திலும் குறைந்தபட்ச பொதுத் திட்டம் வகுக்க வில்லையென்றாலும், ஒருங்கிணைப்புக் குழுவாது அமைக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இதை வரவேற்றார். முதல்வர் கருணாநிதி எடுத்த எடுப்பிலே இக்கோரிக்¨ கயை நிராகரித்து விட்டார்.
இதற்கிடையில் சேலம் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரை தி.மு.க.வினர் புறக்கணிப்பதாக பகிரங்கமாகவே அக்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் வழங்கும் விழாக்களுக்கு பா.ம.க.வினர் அழைக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
'பா.ம.க தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவு அளித்து வரும். தமிழக அரசு வெளிப்படையான, ஊழலற்ற திறமையான அரசாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்' என்று ராமதாஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |