தென்றல் சிறுகதைப் போட்டி 2011 - வெற்றிக் கதைகள்!
தென்றல் சிறுகதைப் போட்டி 2011க்கு அமெரிக்கா, இந்தியா, மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாலந்து என்று உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளனமானவர்கள் வாழ்வின் எல்லா வண்ணக் கலவைகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகளை உற்சாகத்தோடு அனுப்பியிருந்தார்கள். வந்தவை மொத்தம் 79. அறிவிப்பில் கூறியிருந்தபடி தமிழ்நாட்டிலிருந்து வந்தவற்றை மிகுந்த வருத்தத்தோடு விலக்க வேண்டியதாயிற்று. ஆயினும் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறுகதைகள் வந்தன. சிலர் சளைக்காமல் நான்கைந்து கதைகள் கூட எழுதி அனுப்பினர்.

சிறுகதை என்னும் சவாலை மகிழ்ச்சியோடு ஏற்க இத்தனை உள்ளங்களா என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்த கதைகளை வாசிக்கையில் அந்த வியப்பு மேலும் அதிகமானது. எவ்வளவு பேர் எவ்வளவு கவனத்தோடு வாழ்க்கையை நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்று. எழுதியது தமிழில் என்றாலும் எத்தனை வகை மொழிநடை!

இறுதிச் சுற்றில் பரிசுக்கானவற்றைத் தேர்ந்தெடுக்கையில் மனம் கனத்தது உண்மைதான்; அப்படியே நல்லன எல்லாவற்றுக்கும் பரிசு கொடுத்துவிட மாட்டோமா என்று எண்ண வைக்கும் நேர்த்தியில் பல கதைகள் இருந்தன. ஆனாலும் நிதானித்து கருத்துப்புலம், நடை நேர்த்தி, மொழிச் சிறப்பு என்ற அளவுகோல்களை வைத்து, விருப்பு வெறுப்பின்றி ஆசிரியர் குழு பரிசீலித்து பரிசுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்தது.

பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றி. நீங்கள் தென்றலின் இலக்கியத் தரத்தை மதித்ததோடு அல்லாமல், அதனை ஒரு படி மேலேற்ற உதவியிருக்கிறீர்கள். பரிசுக்கானவை தவிர, ஏராளமான கதைகள் பதிப்பிக்கத் தகுந்தவையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

எல்லாப் படைப்பாளிகளுக்கும் தென்றலின் நன்றி, வாழ்த்து, பாராட்டு!

இரத்தினம் சூரியகுமாரன்அம்புஜவல்லி தேசிகாச்சாரிஆனந்த் ராகவ்ஷைலஜா


முதல் பரிசு: உயர்ந்த மனிதன் - இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா.
இரண்டாம் பரிசு: செலவுக்கடை - அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே, கலிஃபோர்னியா.
மூன்றாம் பரிசுகள் (2): மடி நெருப்பு - ஆனந்த் ராகவ், பெங்களூரு, இந்தியா.,
மாடு இளைத்தாலும் - ஷைலஜா, பெங்களூரு, இந்தியா.


பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
1. நீதான் காரணம் - சந்திரமௌலி சுப்ரமணியன், ஹூஸ்டன், டெக்சாஸ்
2. பிராயச்சித்தம் - ஸ்ரீதர் சதாசிவன், நியூ ஜெர்ஸி
3. முஸ்தபா - சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
4. ஒருநாள் கடவுள் - ப்ரீத்தி சேதுராமன், நார்த் கரோலினா
5. மனசு - யாமினி, பெல்மாண்ட், கலிஃபோர்னியா
6. பாசம் - அகிலா, நேப்பர்வில், இல்லினாய்
7. தீர விசாரிப்பதே மெய் - பானுமதி பார்த்தசாரதி, சான் ரமோன், கலிஃபோர்னியா
8. மிஸ்டர் பூட்டைப் பூச்சி - அருண் ஜெகந்நாத், சன்னிவேல், கலிஃபோர்னியா
9. தெரிந்த வழி - ஐரேனிபுரம் பால்ராசய்யா, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
10. தீபா - சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
11. மனசாட்சி - பிச்சுமணி கிருஷ்ணமூர்த்தி, ஜெர்சி சிடி, நியூ ஜெர்ஸி
12. லேபர் டே - சுஜாதா, கெய்தர்ஸ்பர்க், மேரிலேண்ட்
13. விடியல், காயத்ரி அருண், சன்னிவேல், கலிஃபோர்னியா
14. கோபாலன் - சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
15. மண்ணின் மனம் - ராஜேஸ்வரி, சான்டா க்ளாரா, கலிஃபோனியா
16. தெளிவு - லக்ஷ்மி சுப்ரமணியம், மினசோட்டா
17. நஞ்சு - கிரிதரன் ராஜகோபாலன், லண்டன், இங்கிலாந்து
18. பாப்பாக்கு ஸ்கூல் - பிரதிபா ப்ரேம்குமார், அட்லாண்டா, ஜார்ஜியா
19. சாருவும் ஹனுமார் வடையும் - அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோஸே, கலிஃபோர்னியா
20. விருந்தாளி - ராஜா ரங்கராஜன், சான்டா க்ளாரா, கலிஃபோர்னியா
21. மன்னிக்க வேண்டுகிறேன் - ரத்ன சுப்ரமணியன், ஹாலந்து
22. கார் - சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
23. தாய்மை - லக்ஷ்மி சுப்ரமணியம், மினசோட்டா
24. ரங்கதாசி - ஷைலஜா, பெங்களூரு, இந்தியா
25. பெண்குலத்தின் வெற்றிப்படி - நித்யா பாலாஜி, நியூ ஜெர்ஸி
26. கலிஃபோர்னியாவில் வந்து ஒரு கால் கட்டு - டாக்டர் சந்தானம், புனே, இந்தியா
27. குறை ஒன்றும் இல்லை - சப் மோகன், ஹூஸ்டன், டெக்சாஸ்
28. உழைப்பதற்கே பிறந்த ஜீவன் - சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
29. எது நியாயம் - விசாலா சுப்ரமணியன், கூபர்டினோ, கலிஃபோர்னியா
30. சுதந்திர தாகம் - லக்ஷ்மி சுப்ரமணியன், மினசோட்டா
31. ஐ லவ் அமெரிக்கா - ஷைலஜா, பெங்களூரு, இந்தியா
32. பாறைக்குள் பாசம் - மாலா பத்மநாபன், சாரடோகா, கலிபோர்னியா
33. வாழ்க்கைப் பயணங்கள் - விஜயன் சிவ சண்முகம், கெடா, மலேசியா
34. தேங்காய் - ஆனந்த் ராகவ், பெங்களூரு, இந்தியா
35. திட்டம் - லக்ஷ்மி சுப்ரமணியன், மினசோட்டா
36. வானதி - சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
37. பெண்மனம் - ரஞ்சனி ராமமூர்த்தி, ஃப்ரெட்ரிக், மேரிலாந்து
38. பாட்டி சொன்ன பழமை - லக்ஷ்மி சுப்ரமணியன், மினசோட்டா
39. ரம்யாவின் அப்பா, அம்மா யார் - குருப்ரியா, பாம்டேல், கலிஃபோர்னியா
40. என்பும் உரியர் பிறர்க்கு - அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோஸே, கலிஃபோர்னியா
41. மாகாளியின் மகிமை - ராஜேஸ்வரி ஜயராமன், சான்டா க்ளாரா, கலிஃபோர்னியா
42. இரு கோடுகள் - மீரா ராமநாதன், டேன்பரி, கனெக்டிகட்
43. உயர்ந்த உள்ளம் - தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
44. ஒரு கடிதத்தின் விலை - கே.எஸ். சுதாகர், விக்டோரியா, ஆஸ்திரேலியா
45. சர்ப்ரைஸ் விசிட் - சுதாகர் செல்லதுரை, விக்டோரியா, ஆஸ்திரேலியா
46. அன்பும் அருளும் - விஜயன் சிவசண்முகம், கெடா, மலேசியா
47. துணிவே துணை - செல்வன், கிரீன் பே, விஸ்கான்சின்
48. சுமை - சோமு சுந்தரம், ட்ராய், மிச்சிகன்
49. மகனா உயிரா - விஜயன் சிவ சண்முகம், கெடா, மலேசியா
50. பசி - பானு ரவி, சிங்கப்பூர்
51. ஒருநாள் வி.ஐ.பி.க்காக - சுமித்ரா தியாகராஜன், ப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
52. பொரி யோகம் - எல்லே சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா
53. மதுரகானரத்னா - சேகர் - இல்லினாய்
54. மேன்மக்கள் - லக்ஷ்மி அனுஷா, சான் ஹோசே, கலிஃபோர்னியா
55. வடு - ஜெயப்ரபா, சிங்கப்பூர்
56. வெற்றி ஆம்புலன்ஸ் சர்வீஸ் - சீதாராமன், டிராய், மிச்சிகன்
57. புத்தி கொள்முதல் - பி.பஞ்சாபகேசன், பங்களூரு
58. ஒரு நாள் நாடோடி - தாணு கிருஷ்ணமூர்த்தி, கூபர்டினோ, கலிஃபோர்னியா


© TamilOnline.com