அக்டோபர் 22, 2011 அன்று லேக் கௌண்டி தமிழ் அன்பர்கள் சார்பில் தீபாவளித் திருவிழா லேக் கௌண்டி இந்துக் கோவிலில் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. டாக்டர் மாதங்கி சேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுவர், சிறுமியர் கலந்து கொண்ட சுவையான இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இசை, நடனம், சிறுவர் பட்டிமன்றம் மூலம் சிறார்கள் வெளிப்படுத்திய திறன் வியக்கத்தக்கதாய் இருந்தது. விழாவிற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி. இவ்வாண்டு நவரச டான்ஸ் அகாடமி, குச்சுப்புடி நடனப் பயிற்சி மன்றம் ஆகியவை பங்கேற்றது இனியதாக அமைந்தது.
இவ்விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளைச் செய்த டாக்டர் மாதங்கி சேகரன், ஜோதி அருண், மதுமதி குமார், அனிதா சங்கர், சின்னசாமி ஆறுமுகம் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
கமலா ராதாகிருஷ்ணன், லேக் கௌண்டி, இல்லினாய் |