கடத்து கடத்து


குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் கடத்தப்படும் சம்பவங்களைக் கருவாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'திருப்பங்கள்'. நந்தா நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை சுர்விர் நடிக்கிறார். பாடல்கள் நா. முத்துக்குமார். இசை: வித்யாசாகர். தமிழ் சினிமாவின் முதல் பெண் எடிட்டர் என்ற சிறப்பைப் பெறுகிறார், இப்படத்தின் படத்தொகுப்பாளர் ராஜலட்சுமி. பரபரப்பான காட்சிகளும், திருப்பங்களும் கொண்ட இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாரதா ராமநாதன்.

அரவிந்த்

© TamilOnline.com