பெர்க்கலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்ப் பிரிவுக்கு ஒரு துணைப்பேராசிரியர் (Tenure-track) தேவை என அறிவித்துள்ளனர். அவர் முனைவர் பட்டம் பெற்றிருப்பது அவசியம். இலக்கியம் மற்றும் கலாசாரத்தில் ஆய்வு ஈடுபாடு இருக்க வேண்டும். கற்பித்தல், இளங்கலை முதுகலைப் பட்ட வகுப்புகளுக்கான பாடத்திட்டம் வகுத்தல், தமிழ் பயிற்றுதலை ஒருங்கிணைத்தல், பட்ட வகுப்பு மாணவர்களை மேற்பார்வை செய்தல் ஆகியன இவருக்கான கடமைகள். முன்-நவீன, நவீன தமிழ் மற்றும் தமிழிலக்கிய வகைகளில் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்க வேண்டும். தமிழில் உரைநடையும் கவிதையும் வளர்ச்சியுற்ற பின்புலம் குறித்த தேர்ச்சி விரும்பத் தக்கது. மற்றுமொரு தெற்கு அல்லது தென்கிழக்காசிய மொழியில் ஆய்வுப் புலமை பெரிதும் மதிக்கப்படும். ஒப்பீட்டிலக்கியம், வரலாறு, பாற்கல்வி அல்லது கலாசாரக் கல்வி (gender studies/ cultural studies) ஆகிய துறை அறிஞர் பெருமக்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆராய்ச்சி மற்றும் கற்பிப்பதில் உதவ வேண்டும் எனப் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.
விண்ணப்பங்கள் ஜனவரி 10, 2012 தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
மேலும் தகவலுக்கு: tamil.berkeley.edu
விண்ணப்பம் அனுப்ப: மின்னஞ்சல் - tamilsearch@lists.berkeley.edu அஞ்சல்வழி - Chair, Tamil Search Committee, Department of South and Southeast Asian Studies, 7233 Dwinelle #2540, University of California, Berkeley, CA 94720-2540, USA.
செய்திக் குறிப்பிலிருந்து |