கணிதப் புதிர்கள்
1. ராமு, சோமு இருவரும் சகோதரர்கள். ராமுவின் வயதையும் அவன் தந்தையின் வயதையும் பெருக்கினால் 585 வருகிறது. சோமுவின் வயதையும் அவன் தந்தையின் வயதையும் பெருக்கினால் 702 வருகிறது. ராமுவைவிட சோமு 3 வயது பெரியவன் என்றால், ராமு, சோமு, அவன் தந்தை ஆகியோரது வயதுகள் என்ன?

2. . ராஜா எட்டு இட்லிகளை இரண்டு நிமிடங்களில் சாப்பிடுவான். சேகர் ஒன்பது இட்லிகளை ஆறு நிமிடத்தில் சாப்பிடுவான். இருவரும் சேர்ந்து 11 இட்லிகளை எத்தனை நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பர்?

3. கீதாவிடம் சில ரூபாய்கள் இருக்கின்றன. சீதாவிடம் அதைப் போல் இரண்டு மடங்கு தொகை இருக்கிறது. சீதாவிடம் இருக்கும் தொகையின் இரண்டடுக்கிலிருந்து, கீதாவிடம் இருக்கும் தொகையின் இரண்டடுக்கைக் கழித்தால் மீதம் 27 வரும். எனில் கீதா, சீதாவிடம் இருந்த தொகை எவ்வளவு?

4. ABC என்ற எண்களில் A மற்றும் Cயின் கூட்டுத்தொகை 60. Bயிடம் இருக்கும் தொகை Aயிடம் இருப்பதை விட 5 மடங்கு அதிகம். Cயிடம் இருக்கும் தொகை, Bயை விட 7 மடங்கு குறைவு. அப்படியென்றால் ABC என்ற எண்களின் எண்ணிக்கைகள் என்ன?

5. 1, 27, 125, 343, ...... அடுத்து வரிசையில் வரவேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com