நெல்லிக்காய் ரசம்
தேவையான பொருட்கள் நெல்லிக்காய் - 4 அல்லது 5 புளி - சிறு கொட்டைப் பாக்கு அளவு ரசப்பொடி - 1 தேக்கரண்டி துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - கொஞ்சம் நெய் - தேவைக்கேற்ப
செய்முறை துவரம் பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி போட்டுக் கொதிக்க விடவும். கடலைப் பருப்பு, கொத்துமல்லி விதை, மிளகாயைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். ரசம் கொதித்தவுடன் துவரம் பருப்பைத் தண்ணீர் விட்டுக் கரைத்து இந்தப் பொடியுடன் கலந்து ரசத்தில் ஊற்றவும். நன்றாக நுரைத்து வரும்போது இறக்கி வைத்து நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். நெல்லிக்காயில் புளிப்பு இருக்குமாதலால் புளியைக் குறைவாகப் போடவும். புளி இல்லாமல் தக்காளி போட்டும் செய்யலாம். இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |