டிசம்பர் 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
டிசம்பர் மாதம் வந்து விட்டது. இங்கேயும் சங்கீத வாசனையுடன் ஒரு புதை புதிர்
(அதுதான் cryptic clues என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் புதைகுறிப்புகள் கொண்ட புதிர்; இச்சொல்லைத் தந்தவர் ராஜேஷ் கார்கா). ச,ரி,க,ம,ப,த,நி என்றால் என்னவென்று தெரியாத நான் இப்புதிரைச் செய்திருப்பதால் இதை விடுவிக்கப் பெரிய இசைஞானம் தேவையில்லையென்று விளங்கும். சங்கீதத் துறையின் சொற்களை ஏதாவது புத்தகத்தில் அட்டவணையாகவோ, இணையத்திலோ கண்டுகொண்டு புதிரை அவிழ்க்கலாம்.
கச்சேரி களைகட்டவில்லையா, சரி கேண்டினுக்கு வந்து கமகம பொங்கல் சாப்பிட்டு பதப் பிரயோகங்களை மனதில் கொண்டு நீங்கள் இப்புதிரில் மூழ்கலாம்..

குறுக்காக:
5. அரை மன காளி திருநாளைப்போவாருக்கு விலகியது மயங்கப் பாடப்படும் ராகம் (6)
6. "இராமாவதாரம்" ஆசிரியன் வீட்டில் இதுவும் பாடுமென்பர் (2)
7. மலர், கவிதை, ஆதி தாளம் இல்லாமல் பாடப்படும் ராகம் (4)
9. கன்னம் வைத்தவன் முத்தமிடவில்லை (4)
10. தனித் தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக வேண்டுமென்று கோரப்பட்ட‌து (4)
12. ரிஷியில் முதல் ஆனால் மத்யமத்தில் மட்டும் இரண்டாவது (4)
13. பகவனுக்கு முன்பு வந்த‌ ததிங்கினத்தோம் (2)
14. அருந்ததி இறுதியாக‌ நாண மருள் உருள அவளைப் பார்க்கும் தினம் (4, 2)

நெடுக்காக‌:
1. 'மத்யமம்' இல்லாமல் 39ஆம் மேளகர்த்தா வெறும் காற்று (2)
2. சாப்பாட்டுக்காக வார்த்தையே இல்லாமல் பாடுவர்? (4)
3. முதலில் நீத்தார் நினைவுநாளில் ஸ்வரம் சேர்த்த ராகம் (4)
4. படபடப்புடன் இரு ஸ்வரங்களைத் தொடர்ந்து மாற்றப்பட்ட கட்டமா? (6)
8. சுருளும் திரை, பா யாத்த கட்டணமில்லாப் பயணம் (2, 4)
11. தரையில் தவறி விழுந்த காசில்லாப் பயணம் முன்பே நினைத்துப் பார் (4)
12. தேரோட்டி உள்ளே ஸ்வரத்துடன் இசைத்த ராகம் (4)
15. ஒரு பறவை 4.5 இல் 2/3 (2)

வாஞ்சிநாதன்


நவம்பர் 2011 விடைகள்:

© TamilOnline.com