அக்டோபர் 16, 2011 அன்று டெட்ராய்ட் மிச்சிகனிலுள்ள Eternal Mother Temple என அழைக்கப்படும் அன்னை பராசக்தி கோவில் நிர்வாகிகளும், ஓக்லேந்து பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனும்
ஒருங்கிணழிந்து வகீப் கண்ட்ரி கிளப்பில் மாநாடு நடத்தினர். "கொடை" என்பதை மையக்கருத்தாகக் கொண்ட இம்மாநாட்டில் மிச்சிகனிலுள்ள பல்வேறு துறைப் பிரமுகர்கள் பங்கேற்றனர். டாக்டர் திரு. ஜி. கிருஷ்ண குமார் ஆன்மிகச்
சிந்தனைகள் பற்றியும், பராசக்தி கோவிலின் ராஜகோபுரம் உருவாகி வரும் திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். டாக்டர் மோகன் தந்நிரு அவர்கள் ஒக்லேந்து பிஸினஸ் ஸ்கூலின் டீன் ஆவார். இவர் தமது
பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாணவர்கள் பங்கேற்கக் கூடிய ஆறுவாரப் பயிற்சி முகாம் பற்றியும், அதன் பலன்களைப் பற்றியும் விளக்கிக் கூறினார். விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வி. மன்வீன் சலூஜா நன்றியுரை ஆற்றினார்.
காந்தி சுந்தர், டெட்ராய்ட், மிச்சிகன் |