2011 செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை சன்னிவேல் பாலாஜி கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. தினமும் சண்டி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம், மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம், தேவி ஸ்துதி, பஜனை, கன்யா பூஜை ஆகியவை நடைபெற்றன. சாகம்பரி, வஸ்திரம், வெண்ணெய், மஞ்சள், புஷ்பம் என்று பலவகை அலங்காரங்களில் தேவி காட்சி தந்தார். ஹோமங்கள் நடத்தப்பட்டன.
ஒன்பது நாட்களிலும் ஸ்ரீ அனந்தநாத சுவாமிகள் புராணக் கதைகள் கூறினார். விஜயதசமி அன்று மாலையில் மாயா மூர்த்தியின் பாட்டுக் கச்சேரி இடம்பெற்றது. இதற்கு மஹாதேவன் மிருதங்கம் வாசித்தார். அன்று சுமங்கலி பூஜையும் நடத்தப்பட்டது.
வெங்கடேஸ்வர வரபிரசாத் |