டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில் 7 வது ஆண்டு நிறைவு விழா
அக்டோபர் 16, 2011 அன்று டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவிலின் 7 வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. காலையில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஓதப்பட்டது. பிறகு புரோஹிதர் சடகோபன் பெருமாளுக்கு நித்ய ஆராதனம் செய்வித்தார்.

அடுத்து 10 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டஹம் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டன. அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீதர் வெங்கடாச்சாரி

© TamilOnline.com