செப்டம்பர் 21, 2011 அன்று ஆஷா நிகேதனின் நண்பர்கள் அமைப்பு (Friends os Asha Niketan) தனது வருடாந்திர நிதி திரட்டும் விருந்தை நியூ யார்க் ப்ரூக்லினில் உள்ள ரெக்ஸ் மேனரில் நடத்தியது. ஷீலா என்னும் மனவளர்ச்சி குறைந்த பார்வையற்ற மாணவி ஸ்டீவி வொண்டரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இரண்டு இளைஞர்கள் பலவகைப்பட்ட நடனங்களை ஆடி, கூடியிருந்த இருநூறுக்கும் மேலான விருந்தினர்களை மகிழ்வித்தனர். இரண்டு நிர்வாக இயக்குநர்கள், நியூ யார்க் மாகாணத்தின் மனவளர்ச்சி குன்றியோருக்கான முன்னாள் ஆணையர், தற்பொழுது பணிபுரியும் நிர்வாகி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். ஓர் அரசியல் தலைவர் முக்கிய விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தியாவில் உள்ள ஐந்து மையங்களில் செயல்படும் ஆஷா நிகேதன் உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கை மேம்பாட்டுக்கு நிதி திரட்டுவதே இந்த விழாவின் நோக்கம். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. அனுப்ப வேண்டிய முகவரி: Friends of Asha Nikethan, P.O.Box 182, Candlewood Isle, New Fiarfield, CT 06812.
மின்னஞ்சல்: friendsofasha@gmail.com இணையதளம்: www.friendsofasha.com
உஷா வெங்கடராகவன் |