அபிநயாவின் 'Jwala-The Immortal Flame'
நவம்பர் 19, 2011 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனி 'ஜ்வாலா-அணையா நெருப்பு' என்ற பொருளில் நடத்தவிருக்கும் நடன நிகழ்ச்சி நெருப்பின் பன்முகச் செயல்பாட்டை ஆராயும். இந்த இலையுதிர்காலக் கச்சேரி சாரடோகாவில் உள்ள மகஃபி தியேடரில் நடைபெறும்.

தூய்மை செய்வதும் முக்தி தருவதுமாக இந்துப் புராணங்களில் வர்ணிக்கப்படும் தீக்கொழுந்தைக் கட்டுப்படுத்தவும் கையாளவும் மனிதர் முயற்சிப்பதன் விளைவுகளை இந்த நிகழ்ச்சி கொண்டாடும். கலை இயக்குனர் மைதிலி குமார், முக்கிய நடனமணியும் நடன அமைப்பாளருமான ரசிகா குமார் ஆகியோரின் கருத்துருவாக்கத்தில் வடிவமைக்கப்பட இருக்கும் இந்நிகழ்ச்சித் தயாரிப்பில் மாளவிகா குமார் உதவுவார். தகுந்த பாடல்களை தேர்ந்தெடுப்பதோடு விரிகுடாப் பகுதி அறிஞர்கள் இதற்கெனப் புதிய பாடல்களை எழுதுவார்கள். விருதுபெற்ற இசையமைப்பாளர் ஆஷா ரமேஷ் இதற்கு இசை வடிப்பார். மேலும் தகவலுக்கு: www.abhinaya.org.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com