40 புதுமுகங்களின் துள்ளி எழுந்த காதல்


நடிகை பூமிகா தெலுங்கில் தயாரித்து வெற்றி பெற்ற படம் 'தகிட தகிட'. 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் ரீமேக் ஆகும் இப்படத்தை பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவியாளராக இருந்த ஸ்ரீஹரி இயக்குகிறார். 40 புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்தில் நாயகனாக ராஜாவும், நாயகியாக ஹரிபிரியாவும் நடிக்கின்றனர். காதல் தோல்வியும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் படத்தின் கதை. முக்கியப் பாத்திரத்தில் பூமிகாவும், அனுஷ்காவும் நடிக்க இருப்பதாகக் கிசுகிசுக்கிறது கோலிவுட் குருவி. சபேஷ் முரளியின் மகன் போபோ சசி இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com