ஆறு மனமே ஆறு
ஆறு வருடங்கள், ஆறு மாதங்கள், ஆறு வாரங்கள், ஆறு நாட்கள், ஆறு மணிநேரம், ஆறு நிமிடம், ஆறு நொடி என்று அனைத்தும் ஆறில் நடப்பது போல உருவாகி வரும் படம் 6. நாயகனாக ஷாம் நடிக்கும் இப்படத்திற்குப் பெயர் தனியாக

இல்லை. ஆறு என்ற எண் வடிவிலான எரியும் மெழுகுவர்த்திதான் படத்தின் குறியீடாக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஷாம் ஆறு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். தமிழகத்தில் துவங்கும் கதை ஆந்திரா, மகராஷ்டிரா, போபால், டில்லி,

கோவா, கான்பூர் என்று பயணித்து கொல்கத்தாவில் முடிகிறது. முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனம்: ஜெயமோகன்.



அரவிந்த்

© TamilOnline.com