ஹேமா முள்ளூர் புதிய பதவி
ஹேமா முள்ளூர் செப்டம்பர் 14, 2011 முதல் டென்வரில் (கொலராடோ) KDVR-TV the FOX நிலையத்தில் வார இறுதி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் செய்தியாளராகப் பதவி ஏற்றுள்ளார். இதற்கு முன் இவர் எல் பாஸோவில் (டெக்சஸ்) KFOX-TVயிலும், மிட்லண்ட்/ஒடஸாவில் KWES-TVயிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். இரண்டாம் உலகப் போரின்போது எல் பாஸோவில் விமானப் பெண் பைலட்டுகள் பயிற்சி குறித்ததோர் ஆவணப் படத்துக்காக இவர் Lonestar Emmy விருது பெற்றிருப்பதோடு உறுப்புதானம் குறித்த மற்றொரு ஆவணப்படத்துக்காக 2009ல் எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் உண்டு. இவரைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.



© TamilOnline.com