புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், பிற அயலகத் தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு ஒன்றை 2012 ஜூன் 8, 9, 10 நாள்களில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடத்தவுள்ளது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடத்தப்படும். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் பயிற்றுவிப்பதற்கான ஆய்வுக்கட்டுரைகளை மாநாடு வரவேற்கின்றது.

ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவதொன்றைச் சார்ந்திருத்தல் வேண்டும்:

தமிழ்க் கல்விக்கான கருவிகள், உத்திகள், தொழில்நுட்பங்கள் (Tools, techniques and technology in Tamil education)
பயன்மிக்க பாடத் தொகுப்புகளும், திட்டங்களும் (Effective syllabus and curriculum)
தமிழ்க் கல்வியில் கலை, சமூகம், கலாச்சாரத் தாக்கங்கள் (Art, social and cultural influences in Tamil education)
தமிழ் கல்விக்கான வலையமைப்பு உருவாக்கம் (Building a world Tamil education network)

ஆய்வுச் சுருக்கங்களை நவம்பர், 2011க்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
விதிமுறைகளைக் காண: www.tamilhl.org
மின்னஞ்சல்: catamilacademy@yahoo.com
தொலைபேசி: 408-490-0CTA (408.490.0282)

மாநாட்டின் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும், பார்வையாளர்களாய் பங்கெடுக்கவும், தன்னார்வ தொண்டர்களாய்ப் பணி செய்யவும், விளம்பரதாரர்கள் (sponsors) போன்ற அனைவரையும் மாநாடு வரவேற்கிறது.

© TamilOnline.com