கணிதப்புதிர்கள்
1. 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21.... வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

2. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 36. பெருக்குத் தொகை 320. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 4. அந்த எண்கள் யாவை?

3. ராமு மற்றும் சோமுவின் எடை தற்போது 5 : 6 என்ற விகிதத்தில் உள்ளது. அதுவே சென்ற வருடம் 7 : 8 என்ற விகிதத்தில் இருந்தது. ராமுவின் எடை சென்ற வருடத்தை விட 4 பவுண்டு அதிகரித்துள்ளது. சோமுவின் எடை சென்ற வருடத்தை 6 பவுண்டு கூடியுள்ளது என்றால் அவர்களின் தற்போதைய எடை என்ன?

4. A, B, C, D என்ற நான்கு எண்களின் கூட்டுத்தொகை 2520. அதில் முதல் எண்ணை 5ல் பெருக்கினாலும், இரண்டாம் எண்ணை 5ல் வகுத்தாலும், மூன்றாம் எண்ணோடு 5ஐக் கூட்டினாலும், நான்காம் எண்ணிலிருந்து 5ஐக் கழித்தாலும் வரும் விடையாக ஒரே எண்தான் வருகிறது. என்றால் அந்த எண்கள் யாவை?

5. 370, 371, 407 இந்த எண்களின் சிறப்பு என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com