தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் பயத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் நெய் - 1/2 கிண்ணம் மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கருவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு இஞ்சி - ஒரு சிறு துண்டு முந்திரி பருப்பு - 5 அல்லது 6
செய்முறை: முதலில் வழக்கம் போல் அவலை ஊற வைக்கவும். பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து குக்கரில் குழைவாக வேக விடவும். மிளகு, சீரகம் பொடி செய்து வாணலியில் நெய்விட்டு, அதில் பொடி செய்த மிளக சீரகம் மற்றும் இஞ்சி, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து அவலைப் போடவும். பின்பு தேவையான உப்பும் போட்டு
வேகவிடவும். நன்றாக வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பை அதில் கொட்டி, சிறிதளவு மஞ்சள் பொடி, கருவேப்பிலையை போடவும். முந்திரியை நெய்விட்டு வறுத்துப் பொங்கலில் போட்டு நன்றாக கிளறி சூடாக எல்லோருக்கும் பரிமாறவும். ருசியாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |