ஜூலை 30, 2011 அன்று அக்ஷய் ஸ்ரீதரின் கர்னாடக இசை அரங்கேற்றம் பஃபலோ பல்கலை வளாகத்தில் உள்ள லிப்பிஸ் கச்சேரி அரங்கில் நடைபெற்றது. ஸஹானாவில் 'கருணிம்ப' வர்ணத்துடன் ஆரம்பித்து, ஹம்ஸத்வனியில் 'வாரண முக', ரீதிகௌளையில் 'சேரராவதே மிரா', வராளியில் 'மாமவ மீனாக்ஷி, ஹிந்தோளத்தில் 'மா ரமணன்', வஸந்தாவில் 'ராம ராம', பெஹாகில் 'ஸாரமைன', மதுவந்தியில் 'ஸர்வம் ப்ரஹ்ம்ம மயம்', எனப் பல்வேறு வாக்கேயகாரர்களின் ஸாஹித்யம் பாடியது ஜனரஞ்சகமாக அமைந்தது. பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' கண்ணனை மனக்கண்முன் கொண்டு நிறுத்தியது. சங்கராபரணத்தில் ஆலாபனையும், விஸ்தாரமாக நிகழ்த்திய ஸ்வரப்ரஸ்தாரமும் ரசிகர்களின் கரவொலியைப் பெற்றது. தெலுங்கு, தமிழ், ஸ்மஸ்கிருதம், கன்னடம் ஆகிய பல்வேறு மொழிகளில் பாடியது ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.
வி.வி.எஸ். முராரி (வயலின்), வினோத் சீதாராமன் (மிருதங்கம்), கார்த்திக் வெங்கடராமன் (கஞ்சிரா) ஆகியோரின் பக்கவாத்யம் கச்சேரியை சிறக்கச் செய்தன. அக்ஷ்ய் ஸ்ரீதரின் அரங்கேற்றம் சிறப்பாக அமைய உழைத்த குரு திருமதி கீரணாவளி வித்யாசங்கர் போற்றுதற்கு உரியவர். பெற்றோர் மாலினி, ஸ்ரீதர் ஏற்பாடுகளை நன்கு செய்திருந்தனர்.
கமலா ராதாகிருஷ்ணன், நியூ யார்க் |